shadow

daily astrology ctnமேஷம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரி முக்கிய அறிவுரை தருவார். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் உதவுவார். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
கடகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். உடல் நலம் சீராகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கன்னி
இன்றையதினம் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
தனுசு
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எஇன்ண்:6 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்படன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
மீனம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்

Leave a Reply