shadow

இன்றைய ராசிபலன் 28/11/2015
astrology
மேஷம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
கடகம்
எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரிப்பார். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் பலம் பலவீனத்தை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
கன்னி
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
தனுசு
உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மகரம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

Leave a Reply