shadow

astrologyமேஷம்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
இரவு 7.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கடகம்
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். இரவு 7.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் அவசரபட வேண்டாம். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
கன்னி
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். புதியவரின் நட்பால் உற்சாமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கோபம் குறையும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்-. பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மகரம்
இரவு 7.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 7.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
மீனம்
எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிட்டும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாட்களாக பார்’க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

Leave a Reply