shadow

3aa மேஷம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கடகம்
எதிர்காலம் பற்றிய பயமும், வீண் டென்ஷனும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அசைவ, கார உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கன்னி
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். முஉத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
துலாம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை சிந்தனை பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
தனுசு
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மீனம்
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

Leave a Reply