shadow

astrologyமேஷம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பழைய உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
எதிர்ப்புகள் அடங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். புது வேலை அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
கன்னி
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் வரும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மகரம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களின் மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்

Leave a Reply