shadow

7மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

ராசி குணங்கள்
ரிஷபம்
மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

ராசி குணங்கள்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

ராசி குணங்கள்
சிம்மம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

ராசி குணங்கள்
கன்னி
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்-. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள்
தனுசு
மாலை 4 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். சகோதரங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்துப் போகும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் திட்டமிட்டு செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள்
மீனம்
சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா

Leave a Reply