shadow

இன்றைய ராசிபலன் 25/01/2016
astrology
மேஷம்
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சகோதரி மதிப்பார். வியாபாத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிரே
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,நீலம்
 
 
ராசி குணங்கள்
கடகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் தனிநபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கன்னி
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். காணாமல் போன ஆவணம் கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: வைலெட்,இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,பிங்க்
 
 
ராசி குணங்கள்
மகரம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை
 
 
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ப்ரவுன்

Leave a Reply