shadow

 astrology

மேஷம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
கடகம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்களின் ஆதரவுக் கிடைக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
கன்னி
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
துலாம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
தனுசு
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
மகரம்
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள்
மீனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

Leave a Reply