shadow

இன்றைய ராசிபலன்கள் 24/05/2017

 மேஷம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
கடகம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
துலாம்
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
தனுசு
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
மகரம்
திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். முகப்பொலிவுக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரங்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 

Leave a Reply