shadow

இன்றைய ராசிபலன்கள் 24/02/2018

மேஷம்
மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். அழகு, இளமைக் கூடும். பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், கிளிப் பச்சை
ராசி பலன்கள்

ரிஷபம்
இரவு 7.42 மணி வரை சந்திரன் ராசிக்குள் தொடர்வதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி பலன்கள்

மிதுனம்
கணவன்&மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 7.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவை. அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி பலன்கள்

கடகம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசுவீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி பலன்கள்

சிம்மம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, ரோஸ்
ராசி பலன்கள்

கன்னி
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிரே
ராசி பலன்கள்

துலாம்
இரவு 7.42 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி பலன்கள்

விருச்சிகம்
கணவன்&மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு 7.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவை. அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, நீலம்
ராசி பலன்கள்

தனுசு
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி பலன்கள்

மகரம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், மஞ்சள்
ராசி பலன்கள்

கும்பம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. விருந்தினர்களின் வருகையால் உற்சாகம் தங்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், ப்ரவுன்
ராசி பலன்கள்

மீனம்
திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

Leave a Reply