மேஷம்

புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்கோபம் விலகும். பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ரிஷபம்

உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

மிதுனம்

மதியம் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

கடகம்

குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

சிம்மம்

இன்றையதினம் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு. வீடு, வாகனச் செலவுகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

கன்னி

செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக சில பிரபலங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

துலாம்

முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். வாகனவசதி பெருகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

விருச்சிகம்

மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். உங்களின் பலம், பலம் எது என்பது உங்களுக்கே தெரிய வரும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் ஒரளவு வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

தனுசு

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பணவரவு திருப்தி தரும். சொந்த-பந்தங்களால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

மகரம்

இன்றையதினம் திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

கும்பம்

இன்றையதினம் நம்பிக்கைக்கு‌ரியவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

மீனம்

புதுமுயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். தலைச்சுற்றல், வயிற்றுவலி விலகும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பணவரவு உண்டு. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

Leave a Reply