shadow

astrologyமேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பழைய சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,பச்சை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க்,க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
மதியம் 2.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை,மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். லேசாக தலை வலிக்கும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 2.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,வெள்ளை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு திப்பளிப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம்,பிங்க்
 
 
ராசி குணங்கள்
கன்னி
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை,ரோஸ்
 
 
ராசி குணங்கள்
துலாம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு,கிரே
 
 
ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 2.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,வைலெட்
 
 
ராசி குணங்கள்
மகரம்
ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம் முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா
 
 
ராசி குணங்கள்
கும்பம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,பிங்க்
 
 
ராசி குணங்கள்
மீனம்
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,வெளிர் நீலம்

Leave a Reply