shadow

daily astrologyமேஷம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
காலை 10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் குழப்பம் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கடகம்
காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
கன்னி
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் வரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
தனுசு
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மகரம்
காலை 10 மணி வரை ராசிக்குள் சந்திரன் நிற்பதால் எதிலும் நிதானம் அவசியம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
காலை 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். புது முதலீடுகளை தவிர்க்கவும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
மீனம்
எடுத்த வேலையை முழுமையாக முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வேண்டாமே. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்

Leave a Reply