shadow

rasipalan 1today astrology
மேஷம்

குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கடகம்
எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
கன்னி
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்க காரியங்களிலிருந்த பின்னடைவு நீங்கும். வயிற்றுவலி, மனஉளைச்சல் நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக் குறியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
துலாம்
இன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றையதினம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள். கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
மனக்குழப்பம் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
மகரம்
சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மீனம்
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

Leave a Reply