shadow

7

ராசி குணங்கள்
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
ரிஷபம்: கணவன்&மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
மிதுனம் இன்றையதினம் ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.தாயின் உடல் நிலை சீராகும். நண்பர்கள்,உறவினர்களின் உதவி கிட்டும்.மனக்குழப்பங்கள் நீங்கும்.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.சகோதரவகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கடகம்
கடகம் இன்றையதினம் சோர்வு,அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.குடும்பத்தில் அமைதி நிலவும்.கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும்.பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும்.உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும்.பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட்,இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சிம்மம் நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன் &மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.உத்யோகத்தில் மன உளைச்சல் நீங்கும்.பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பெற்றோரின் ஆதரவு உண்டு.வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,பிங்க்
 
 
ராசி குணங்கள்
துலாம்
துலாம் இன்றைய தினம் மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் &மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உறவினர்கள்,நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு.குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.தந்தையின் உடல் நிலை சீராகும்.வியாபாத்தில் பாக்கிகள் வசூலாகும்.வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
விருச்சிகம் புது முயற்சிகள் வெற்றி தரும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு.கணவன் &மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.முன்கோபம் விலகும்.பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள்.அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை
 
 
ராசி குணங்கள்
தனுசு
தனுசு உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் &மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள்.பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள்.அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மகரம்
மகரம் இன்றையதினம் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்&மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பீர்கள்.தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு.வீடு,வாகனச் செலவுகள் குறையும்.அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கும்பம் செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள்.வியாபார ரீதியாக சில பிரபலங்களைச் சந்திப்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.மாணவர்களின் நினைவாற்றல் கூடும்.கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: கிரே,மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
மீனம் முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.கணவன் &மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.வாகனத்தை சீர்செய்வீர்கள்.கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும்.மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.வாகனவசதி பெருகும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா

Leave a Reply