shadow

daily rasipalanமேஷம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். எதிர்பாராத திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கடகம்
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதர வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கன்னி
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைக் குறைக் கூற வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
துலாம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க் கைத் துணையின் ஆதவு கிட்டும். கையில் காசு பணம் புரளும். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
தனுசு
வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர் களை அதிரச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
மகரம்
இன்றையதினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தி‌ல் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய‌‌த் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உ‌த்தியோகத்தில் பணிகளை விறைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மீனம்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்படும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

Leave a Reply