shadow

இன்றைய ராசிபலன் 19/08/2015

astrologyமேஷம்
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்ஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
கன்னி
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
துலாம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
மகரம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மீனம்
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

Leave a Reply