shadow

 7மேஷம்
காலை 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
மிதுனம் இன்றையதினம் சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படை வீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
கடகம்
கடகம் துடிப்புடன் காணப்படுவீர்கள். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் &மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாயாரின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சிம்மம்: காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
கன்னி
கன்னி: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் பகை உண்டாகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். விருந்தினர்களின் வருகையால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
துலாம் பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் &மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தருவதாக அமையும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
விருச்சிகம் ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். கன்னிப்பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பார்கள். அரசாங்க வேலைகளிலிருந்து வந்த தடைகள் நீங்கும். விருந்தினர்களின் வருகையுண்டு. அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
தனுசு
தனுசு மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்குறியவர்களின் ஆதரவு கிட்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். கன்னிப்பெண்களுக்கு காதல் கைகூடும். வயிற்றுவலி, கனவுத்தொல்லை நீங்கும். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மகரம்
மகரம் இன்றையதினம் அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மாணவர்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கும்பம் இரண்டுமூன்று நாட்களாக முடியாமல் இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன் &மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டாநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலைக் காணப்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
மீனம்
மீனம் காலை 10 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். முன்கோபம் விலகும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை, நீலம்

Leave a Reply