shadow

astrologyமேஷம்
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் நண்பர்களாக அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
கடகம்
இன்றையதினம் எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். யோகா, தியானம் என மனம் செல்லும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கன்னி
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
இன்றையதினம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
தனுசு
எதையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
மீனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்

Leave a Reply