shadow

astrologyமேஷம்
இன்றையதினம் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கடகம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அழகு, இளமைக் கூடும். புதிய எண்ணங்கள் பிறக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
மதியம் 2.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை
 
 
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 2.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அரசால் அனுகூலம் உண்டு. சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
தனுசு
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
மகரம்
மதியம் 2.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 2.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
மீனம்
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்

Leave a Reply