shadow

இன்றைய ராசிபலன் 17/10/2016

astrologyமேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். கணவன் & மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ராசி குணங்கள் ரிஷபம்
பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் மிதுனம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

ராசி குணங்கள் கடகம்
மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

ராசி குணங்கள் சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன் & மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் கன்னி
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் துலாம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் விருச்சிகம்
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் தனுசு
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் மகரம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். புது வேலை அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள் கும்பம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள் மீனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்-. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

Leave a Reply