shadow

இன்றைய ராசிபலன் 16/08/2016
astrologyமேஷம்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் ரிஷபம்
காலை 7.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் மிதுனம்
காலை 7.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். எல்லோரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றார்கள் என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் கடகம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் சிம்மம்
வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வி£பாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள் கன்னி
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள் துலாம்
நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள் விருச்சிகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள் தனுசு
காலை 7.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் மகரம்
காலை 7.00 மணி முதல் ராசிக்குள் சந்தரன் தொடங்குவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேன்டியிருக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள் கும்பம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள் மீனம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

Leave a Reply