shadow

astrologyமேஷம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
இன்றையதினம் திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள்.அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும்.வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
கடகம்
இன்றையதினம் நம்பிக்கைக்குறையவர்களின் சந்திப்பு நிகழும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு.மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
புதுமுயற்சிகள் வெற்றியடையும்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும்.தலைச்சுற்றல், வயிற்றுவலி விலகும்.கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.பணவரவு உண்டு. அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
கன்னி
சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். தர்மசங்கடமான சூழல்களில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு.வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளின் நினைவுத்துறன் பெறுகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர் களால் உதவிகள் கிடைக்கும்.வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. பெற்றோரின் உடல் நிலை சீராக இருக்கும்.வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
தனுசு
வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும்.குடும்பத்தினருடன் மனம்விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிக்கப்படுவீர்கள்.வாகனபழுது சீராகும். வழக்கிகளிலிருந்த தேக்க நிலை மாறும்.தாயாரின் உடல் நிலை சீராக அமையும்.ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மகரம்
பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள்.தந்தையின் உடல் நலம் சீராகும்.கையில் காசு பணம் தேவையான அளவு புரளும்.சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும்.நீண்டநாளாக நினைத்திருந்த காரியத்தை இப்பொழுது செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
கும்பம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள்.குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும்.கையில் காசுபணம் புரளும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.நட்பு வட்டாரம் விரியும்.தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
மீனம்
புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும்.தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

Leave a Reply