shadow

7மேஷம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ராசி குணங்கள்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள்
மிதுனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள்
கடகம்
இன்றையதினம் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

ராசி குணங்கள்
சிம்மம்
உங்களுடைய ஆலோசனைகளை குடும்பத்தில் உள்ளவர்களும், மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

ராசி குணங்கள்
கன்னி
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள்
துலாம்
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்துப் போகும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

ராசி குணங்கள்
விருச்சிகம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

ராசி குணங்கள்
மகரம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

ராசி குணங்கள்
கும்பம்
இன்றையதினம் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

ராசி குணங்கள்
மீனம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

Leave a Reply