shadow

1மேஷம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனம் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். மாலை 5.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
இன்றையதினம் சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.குடும்பத்தில் அமைதி நிலவும்.கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும்.பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும்.உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும்.பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.உத்தியோகத்தில் மன உளைச்சல் நீங்கும்.பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பெற்றோரின் ஆதரவு உண்டு.வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
கடகம்
இன்றைய தினம் மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு.குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.தந்தையின் உடல் நிலை சீராகும்.வியாபாத்தில் பாக்கிகள் வசூலாகும்.வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மாலை 5.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
துலாம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள்.பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றையதினம் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பீர்கள்.தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு.வீடு, வாகனச் செலவுகள் குறையும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
தனுசு
செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள்.வியாபார ரீதியாக சில பிரபலங்களைச் சந்திப்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.மாணவர்களின் நினைவாற்றல் கூடும்.கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
மகரம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.வாகனத்தை சீர்செய்வீர்கள்.கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும்.மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.வாகனவசதி பெருகும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கும்பம்
தன்னம்பிக்கை துளிர்விடும்.தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டங்களைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பீர்கள்.தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும்.கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும்.உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
மீனம்
மாலை 5.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். மாலையிலிருந்து தடைகள் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

Leave a Reply