shadow

இன்றைய ராசிபலன் 14/12/2015
astrology
மேஷம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கடகம்
உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
துலாம்
எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
தனுசு
காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மகரம்
காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். சிறுசிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
மீனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 

Leave a Reply