இன்றைய ராசிபலன் 14/04/2016

astrology
ராசி குணங்கள் மேஷம்
சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள் ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் மிதுனம்
மதியம் 2.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள் கடகம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மதியம் 2.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள் சிம்மம்
பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சகோதரி ஒத்துழைப்பார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள் கன்னி
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள் துலாம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி குணங்கள் விருச்சிகம்
மதியம் மணி 2.00 வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

ராசி குணங்கள் தனுசு
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதியம் 2.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ராசி குணங்கள் மகரம்
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள் கும்பம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். நட்பு வட்டம் விரியும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் மீனம்
பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *