rp_1005-300x225.jpg
ராசி குணங்கள்
மேஷம்
சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றிஅடைவீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய கடனையை பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல் நீங்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள்
ரிஷபம்
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். நட்பு வட்டாரம் விரியும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள்
மிதுனம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லை கள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்காலத்திற் கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள்
கடகம்
இன்றையதினம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். கையில் காசுபணம் புரளும். பிரியமானவர்களுக் காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்பவருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளால் லாபத்தை பெறுக்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள்
சிம்மம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். சொந்த -பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் நிதானம் அவசியம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள்
துலாம்
எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தேதீர்வு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாகனத்தை மாற்றுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள்
விருச்சிகம்
பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சி யுண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம் -பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி குணங்கள்
தனுசு
இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். அரசு காரியங்ளில் ஆர்வம் காட்டுவீர்கள். வயிற்றுவலி, தலைசுற்றல் விலகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

ராசி குணங்கள்
மகரம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

ராசி குணங்கள்
கும்பம்
இன்றைய தினம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படு வீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

Leave a Reply