shadow

images

மேஷம்: பகைவர்களின் கெடுசெயலை முறியடிப்பீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கு, புதிய வழி காண்பீர்கள். பெண்கள், குடும்ப நலனில் அக்கறை கொள்வர். நண்பர்களால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்: மனதில் நிம்மதி நிலைத்திருக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை உண்டாகும். மனைவி விரும்பியதை வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்: மன வருத்தம் நீங்கி அமைதி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

கடகம்: அன்றாடப் பணிகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். ஆரோக்கியம் பெற சீரான ஓய்வு உதவும்.

சிம்மம்: மனதில் உற்சாகம் மேலோங்கும். எதிர்கால வளர்ச்சிக்காகப் பாடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: வெளி வட்டார தொடர்பால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கித் தருவீர்கள்.

துலாம்: பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை உண்டாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

விருச்சிகம்: யாரிடமும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்ற வேண்டும்.

தனுசு: குடும்பத்தினரின் அன்பை பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் சிக்கனத்தின் மூலம் சேமிக்க முயல்வர்.

மகரம்: உங்கள் செயல்களை மற்றவர்கள் விமர்சிக்கலாம். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்பு மூலம் லாபம் காண்பீர்கள். பெண்கள் பொருள் இரவல் கொடுக்க, வாங்க கூடாது.

கும்பம்: நல்லெண்ணத்துடன் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். புத்திரர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் தடை விலகும். வருமானம் சீராகும். உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.

Leave a Reply