shadow

 daily astrology ctnமேஷம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். செலவினங்கள் அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில்வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கன்னி
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்-. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
தனுசு
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
மகரம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், ப்ரவுன்

Leave a Reply