shadow

இன்றைய ராசிபலன்கள் 10/07/2016

astrologyமேஷம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் ரிஷபம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

ராசி குணங்கள் மிதுனம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

ராசி குணங்கள் கடகம்
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் கன்னி
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் துலாம்
வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துச் செல்லும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் விருச்சிகம்
எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் தனுசு
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள் மகரம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது பொருள் சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள் கும்பம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள் மீனம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

Leave a Reply