இன்றைய ராசிபலன் 10/06/2016

astrologyமேஷம்
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி குணங்கள் ரிஷபம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

ராசி குணங்கள் மிதுனம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் கடகம்
நண்பகல் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

ராசி குணங்கள் சிம்மம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். நண்பகல் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ராசி குணங்கள் கன்னி
எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் துலாம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

ராசி குணங்கள் விருச்சிகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

ராசி குணங்கள் தனுசு
நண்பகல் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ராசி குணங்கள் மகரம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பணவரவு திருப்தி தரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பகல் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் கும்பம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

ராசி குணங்கள் மீனம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *