shadow

astrologyமேஷம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள்
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள்
மிதுனம்
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள்
கடகம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தை பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள்
சிம்மம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புது வேலை கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள்
கன்னி
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள்
துலாம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள்
விருச்சிகம்
மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள்
தனுசு
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள்
மகரம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள்
கும்பம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள்
மீனம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை, வெள்ளை

Leave a Reply