shadow

இன்றைய ராசிபலன் 06/07/2016

astrologyமேஷம்
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

ராசி குணங்கள் மிதுனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

ராசி குணங்கள் கடகம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். யாரையும் தூக்கி எறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்

ராசி குணங்கள் சிம்மம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் கன்னி
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் துலாம்
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே

ராசி குணங்கள் விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் மகரம்
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் கும்பம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் மீனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

Leave a Reply