shadow

astrology

 

 

இன்றைய ராசிபலன் 06/01/2015

மேஷம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
கடகம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கன்னி
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கோபத்தால் இழப்புகள் ஏற்படும். பழைய பகை, கடன் நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
தனுசு
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
மகரம்
எந்தப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
கும்பம்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நெருங்கியவர்களுக்காக சிலரின் உதவியை நாடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

 

Chennai Today News: Today Astrology  06/01/2015

Leave a Reply