shadow

இன்றைய ராசிபலன் 06/02/2016

astrologyமேஷம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள்
ரிஷபம்
இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி குணங்கள்
மிதுனம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ராசி குணங்கள்
சிம்மம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி குணங்கள்
கன்னி
கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

ராசி குணங்கள்
துலாம்
துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

ராசி குணங்கள்
தனுசு
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ராசி குணங்கள்
மகரம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள்
கும்பம்
வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

ராசி குணங்கள்
மீனம்
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

Leave a Reply