shadow

download (2)

மேஷம்: பகைவர்களின் முயற்சி பலமிழந்து போகும். தொழில், வியாபாரத்தில், தடைநீங்கி லாபம் கூடும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பர்.

ரிஷபம்: எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில், மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். தாயின் அன்பு, ஆசி, பலமாக கிடைக்கும்.

மிதுனம்: உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில், வருமானம் திருப்தியளிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும்.

கடகம்: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில், லாபம் படிப்படியாக உயரும். புத்திரர் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவர்.

சிம்மம்: யாரிடமும் அளவுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில், சுமாரான லாபம் கிடைக்கும். வாகன பயணத்தில், மித வேகம் பின்பற்றவும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனுக்காகச் செலவழிப்பர்.

கன்னி: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால், வருமானம் கூடும். குடும்பத்தின் தேவையறிந்து, நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.

துலாம்: நல்லவர்களின் நட்பால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில், வருமானம் திருப்தியளிக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள். போட்டி, பந்தயங்களில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில், லாபம் பன்மடங்கு உயரும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர்.

தனுசு: மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில், எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்கள், ஆடை, ஆபரணம் வாங்கி குவிப்பர். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.

மகரம்: சமயோசிதத்தால் எதிலும் வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில், சீர்திருத்தப்பணி செய்வீர்கள். லாபம் கூடும். உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது. மாணவர்கள், நண்பர்களுடன் சேர்ந்து படிப்பர்.

கும்பம்: பொது விஷயத்தில், கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில், மிதமான லாபம் கிடைக்கும். உறவினர் வகையில், திடீர் செலவு ஏற்படலாம். போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம்: வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவீர்கள். தொழில், வியாபாரத்தில், அபரிமிதமான லாபம் உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும். விருந்து, விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

Leave a Reply