இன்றைய ராசிபலன்கள் 06.01.2018

மேஷம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
ராசி பலன்கள்

ரிஷபம்
எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,பிங்க்
ராசி பலன்கள்

மிதுனம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்
ராசி பலன்கள்

கடகம்
கணவன் & மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். உடல் நலம் சீராகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை
ராசி பலன்கள்

சிம்மம்
இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ப்ரவுன்
ராசி பலன்கள்

கன்னி
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள்-. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்துப் போகும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ஆரஞ்சு
ராசி பலன்கள்

துலாம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே,மஞ்சள்
ராசி பலன்கள்

விருச்சிகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா
ராசி பலன்கள்

தனுசு
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,கருநீலம்
ராசி பலன்கள்

மகரம்
சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிரே
ராசி பலன்கள்

கும்பம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். தாயார் ஆதரித்துப் பேசுவர். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,மஞ்சள்
ராசி பலன்கள்

மீனம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *