shadow

rasipalanமேஷம்
விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன் -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
மாலை 5. 30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. மாலை 5. 30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கடகம்
காலைப் பொழுதிலிருந்தே மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிராத்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வாகனப் பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
நீண்ட நாளாக மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
கன்னி
காரியங்களை முடிப்பதிலிருந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சோம்பல், உடல் அசதி, நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். கோபம் தணியும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
துலாம்
இன்றைய தினம் பரபரப்புடன் காணப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
தனுசு
மாலை 5. 30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். மாலை 5. 30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
இன்றைய தினம் பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மீனம்
நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். மனக்குழப்பங்கள் விலகும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

Leave a Reply