shadow

astrologyமேஷம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
தனுசு
எதிர்காலம் பற்றிய பயம், வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
மகரம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

Leave a Reply