shadow

1மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
இன்றையதினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உதியோகத்தில் பணிகளை விறைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
கடகம்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்படும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர் கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வாகனத்திலிருந்து வந்த பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
கன்னி
இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் ஈகோப் பிரச்னைகள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
தனுசு
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மகரம்
வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
கும்பம்
இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
மீனம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. வெளிவட்டாத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

Leave a Reply