shadow

daily astrologyமேஷம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
கடகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கன்னி
எதிர்காலம் பற்றிய கவலைகளும், மறைமுக விமர்சனங்களும் வந்து நீங்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
தனுசு
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உடல் நலம் சீராகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். புது அத்தியாயம் தொடங்கும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தில் யாரும் உங்களை மதிக்கவில்லையென்று நினைத்துக் கொள்வீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
மீனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்

Leave a Reply