shadow

 rasipalanமேஷம்
மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
இன்றையதினம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
காலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
கடகம்
வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளை களின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோபம் குறையும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
இன்றையதினம் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
கன்னி
ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டி களுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. பிரபங்களின் உதவி கிடைக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
துலாம்
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண் களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
மதியம் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
தனுசு
உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
மகரம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராகும். கணவன் -மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மீனம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

Leave a Reply