இன்றைய ராசிபலன் 03/04/2016

astrologyமேஷம்
உங்கள் செயலில் வேகம் கூடும். சகோதரர்களால் பயனடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்

ராசி குணங்கள் ரிஷபம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் மிதுனம்
சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள் கடகம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள் சிம்மம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள் கன்னி
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள் துலாம்
பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்

ராசி குணங்கள் விருச்சிகம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

ராசி குணங்கள் தனுசு
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ராசி குணங்கள் மகரம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள் கும்பம்
கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் மீனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய சிக்கல்கள் தீரும். வராது என்றிருந்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *