shadow

 daily rasipalanமேஷம்
இன்றையதினம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். கையில் காசுபணம் புரளும். பிரியமானவர்களுக் காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்பவருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளால் லாபத்தை பெறுக்குவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தேதீர்வு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாகனத்தை மாற்றுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சி யுண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
கடகம்
இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். அரசு காரியங்ளில் ஆர்வம் காட்டுவீர்கள். வயிற்றுவலி, தலைசுற்றல் விலகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
கன்னி
இன்றையதினம் எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
துலாம்
இன்றைய தினம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படு வீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
தனுசு
இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
மகரம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கும்பம்
எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
மீனம்
இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

Leave a Reply