shadow

இன்றைய ராசிபலன் 01.01.2016
astrology
மேஷம்
சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
இன்றைய தினம் புதிய திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்கை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கடகம்
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கன்னி
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
துலாம்
மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
தனுசு
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
மகரம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
கும்பம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
மீனம்
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

Leave a Reply