பரபரப்பு அரசியலுக்கு இடையே கூடும் அதிமுக பொதுகுழு: ரஜினிக்கு பதிலடி கொடுக்கப்படுமா?

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு, செயற்குழு உறுப்பினர்களாக 370 பேர்களும், பொதுக்குழு உறுப்பினர்களாக 2ஆயிரம் பேர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் என்ற நிலையில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பொதுக்குழுவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்களை வரவேற்க, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்று நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு வியூகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்றைய பொதுக்குழுவில் ரஜினி, கமலுக்கு பதிலடி தரும் வகையில் முதல்வர், துணை முதல்வர் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply