இன்று வெற்றி பெற்றால் வரலாறு படைக்கலாம்: கோஹ்லி சாதிப்பாரா?

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, முதல் மூன்று ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று போர்ட் எலிசபெத் நகரில் 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று வரலாறு படைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியில் கோஹ்லி, தவான் மட்டுமே ரன்குவித்து வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா கடந்த நான்கு போட்டியிலும் சொற்ப ரன்களே எடுத்துள்ளார். அதேபோல் தோனி உள்பட மற்ற வீரர்களும் மந்தமாக விளையாடி வருகின்றனர்.

அதேபோல் பவுலிங்கை பொறுத்தவரையில் புவனேஷ்வர், பும்ரா மிரட்டினாலும் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப், சகால் ஏமாற்றி வருகின்றனர். கேதர் ஜாதவ் காயம் மற்றும் பாண்ட்யாவின் சுமாரான பவுலிங் ஏமாற்றம் தருகிறது.

இருப்பினும் இந்திய அணி முழுவீச்சில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இன்று விளையாடினால் வரலாற்று சாதனை படைக்கலாம்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *