shadow

தமிழனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் ஹீரோவாக மாறிய காவலர்


சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த போராட்டத்திற்கு காவல்காக்கும் காவலர் ஒருவரே திடீரென உணர்ச்சி வசப்பட்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலர் சீருடையில் மாணவர்கள் முன் அந்த காவலர் பேசியதாவது:”இது ஒரு துவக்கம்தான். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. காவல்துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது. இங்கு சீருடை இல்லாமல் நிறைய காவல்துறைகாரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மண்ணில்தான் நேதாஜியும் பிறந்தார். காந்தியும் பிறந்தார். காந்தி பிறந்த மண்ணு என்று ஓட்டு கேட்க வந்த மோடிக்கு அப்போது தெரியவில்லையா? விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். தமிழனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். உயரதிகாரிகள் கொடுத்த பிரஷ்ஷாரால் தற்போது இந்த காவல்துறைகாரர்கள் என்னை கூப்பிடுகின்றனர். என் சொந்த ஊர் மதுரை. ராமனாதபுரம்தான் என்னுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் இல்லாமல் நாங்கள் எங்கு பஞ்சம் பிழைக்க செல்வது. நாங்கள் அமெரிக்காவா செல்ல முடியும். எங்களால் பேச முடியாமல் இருக்கிறோம். ஜல்லிக்கட்டு வெற்றி பெறும். இனி அடுத்தது மண் கொள்ளையை நாம் தடுக்க வேண்டும் ”

காவலரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Leave a Reply