shadow

Jayalalitha_def8099

இதுவரை நடந்த தேர்தல்களில் மாநிலக்கட்சிகளும், தேசிய கட்சிகளும் இணைந்துதான் தேர்தலில் களம் கண்டுள்ளது. ஆனால் முதல்முறையாக தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தனித்து களம் காணுகின்றன. விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தாலும், மொத்தம் 35 தொகுதிகளில் முதல்முறையாக திமுக போட்டியிடுகிறது.

அதுபோல அதிமுக கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் முதல்முறையாக தனித்து களமிறங்க துணிவுடன் தனது பயணத்தை தொடங்குகிறது.

தமிழகத்தில் தற்போது அதிமுக, திமுக, பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் என ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன.

அகில இந்திய அளவில் கருத்துக்கணிப்புகள் எடுக்கும் நிறுவனங்கள் தமிழகத்தை பொருத்தவரை அதிமுக, திமுக கூட்டணிக்கே போட்டி என கூறுகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் நான்கு கட்சிகள் இருந்தாலும், ஒவ்வொரு கட்சியும் கருத்துவேறுபாடுகளுடன் கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

விஜயகாந்த் பாமக தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் தவிர்ப்பதும், பாமக விஜயகாந்த்தை தாக்கி அறிக்கை விடுவதுமாக உள்ளது. அதுமட்டுமின்றி கூட்டணி தலைமைக்கு மீறி புதுச்சேரியில் தனி வேட்பாளரை நிறுத்தி பிடிவாதம் பிடித்து வருகிறது.

எனவே இந்த தேர்தலில் அதிமுக அணி அதிக இடங்களை பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக First post என்ற நிறுவனம் எடுத்துள்ள கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதிமுக கூட்டணிக்கு 30 தொகுதிகள் வரையிலும், திமுக கூட்டணிக்கு 5 முதல் 7 தொகுதிகள் வரையிலும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது. மற்றும் பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

தேமுதிக கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் பெரிதுபடுத்தினாலும், அந்த கட்சிக்கு குறைந்த அளவே இந்த தேர்தலில் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

Leave a Reply